தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கு (PFCA)
- PFCA (NR) – தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கு – இலங்கையில் வதியாதோருக்கானது (NRFC, NRNNFA என முன்னர் அறியப்பட்டது.)
- PFCA (R) – தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கு – இலங்கையில் வதிவோருக்கானது (RFC, RNNFC என முன்னர் அறியப்பட்டது)
- ரண்மசு என்ற தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்குகளை (வதியாதோர்/ வதிவோர்) ஐ.அ.டொ. யூரோ, ஸ்ரேலிங் பவுண், அவுஸ்திரேலிய டொலர், யப்பான் யென் நாணயங்களில் நீங்கள் ஆரம்பிக்க முடியும்.
தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்குகளை (வதியாதோர்) யார் ஆரம்பிக்கலாம்?
- பருவமடையாதோர் உள்ளடங்கலாக இலங்கையர் அல்லது இலங்கையினை பூர்வீமாக கொண்டவர்
- இலங்கைக்கு வருகை தருகின்ற இலங்கையர் அல்லாதோர்
- வெளிநாட்டில் தொழில் பெற்ற இலங்கையர், அவர்கள் வெளிநாட்டில் இருக்கின்ற போது அல்லது இலங்கைக்கு அவர்கள் திரும்பி 182 நாட்களினுள்
- வேறு ஏதேனும் வங்கியுடன் தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கு (வதியாதோர்) கணக்கொன்றினை வைத்திருக்கின்ற இலங்கையர் ( நிதியங்களை மாற்றல்செய்தன் மூலம்)
தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்குகளை (வதிவோர்) யார் ஆரம்பிக்கலாம்?
- இலங்கையில் வதிகின்ற இலங்கையர் அல்லது இலங்கையர் அல்லாதோர்
எவ்வகையான தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்குகளை (வதியாதோர்)/ (வதிவோர்) ஆரம்பிக்க முடியும்
சேமிப்புக் கணக்குகள்:
இது வட்டியுடனான கணக்கொன்றாகும். மாதத்திற்கான குறைந்தபட்ச மீதியின் மீது வட்டி கணிக்கப்படுவதுடன் ஆண்டின் இறுதியில் கணக்கிற்கு வரவு வைக்கப்படும். கணக்குப் புத்தகத்திற்கு பதிலாக ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களின் இறுதியில் கணக்குக் கூற்றொன்று அனுப்பப்படும். வைப்பிடப்படுகின்ற அனைத்து பணவனுப்பல்கள், வரைவுகள் மற்றும் கொடுப்பனவு கட்டளைகள் அத்துடன் கணக்கிலிருந்து நிதி மீளெடுப்புக்கள் என்பவற்றுக்கு குறிப்பொன்று அனுப்பப்படும்.
- தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கு (வதியாதோர்) குறைந்த பட்ச மீதி – ஐ.அ.டொ./ யூரோ/ ஸ்ரேலிங் பவுண்/ அவுஸ்திரேலிய டொலர் 25 அல்லது யப்பான் யென் 3000
- தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கு (வதிவோர்) குறைந்த பட்ச மீதி – ஐ.அ.டொ./ யூரோ/ ஸ்ரேலிங் பவுண் 100/ அவுஸ்திரேலிய டொலர் 150 அல்லது யப்பான் யென் 12000
தனிப்பட்ட வெளிநாட்டு நாணய (வதியாதோர்) சேமிப்புக் கணக்கினை ஆரம்பிப்பதற்கு தேவையான ஆவணங்கள் யாவை?
- கணக்கு ஆரம்பிப்பதற்கான படிவம்
- தனிப்பட்ட/ வீசா விபரங்களை உள்ளடக்குகின்ற அத்துடன் / அல்லது பிரஜா உரிமையுடன் அல்லது பராயமடையாதவர் உள்ளடங்கலாக பூர்வீக இலங்கையருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வீசாவின் தன்மை ஆகியவற்றை உள்ளடக்குகின்ற கடவுச் சீட்டுப் பக்கங்களின் பிரதி
- பொறுப்பாணை பிரகடனம் (இணைப்பு I,II,III)
- இலங்கையர் அல்லாதோருக்கு கடவுச்சீட்டு மற்றும் இலங்கையில் தொழில் மற்றும் பணியாற்றும் இடம் பற்றிய விபரங்களுடன் குடிவரவு /குடியகழ்வு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட வீசா
தனிப்பட்ட வெளிநாட்டு நாணய (வதிவோர்) சேமிப்புக் கணக்கினை ஆரம்பிப்பதற்கு தேவையான ஆவணங்கள் யாவை?
- கணக்கு ஆரம்பிப்பதற்கான படிவம்
- அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணம் (கடவுச் சீட்டு/ தேசிய அடையாள அட்டை/ சாரதி அனுமதிப் பத்திரம்)
- பொறுப்பாணை பிரகடனம் (இணைப்பு I,II,III)
- இலங்கையர் அல்லாதோருக்கு கடவுச்சீட்டு மற்றும் இலங்கையில் தொழில் மற்றும் பணியாற்றும் இடம் பற்றிய விபரங்களுடன் குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட வீசா
(ஆவணங்களின் போட்டோ பிரதிகள் மூல ஆவணத்துடன் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்)
நிலையான வைப்புகள்:
இது 1,3,6,மற்றும் 12 மாத காலப்பகுதிகளுக்காக ஏற்றுக் கொள்ளப்படுகின்ற வட்டியுடைய கணக்கொன்றாகும். ஆரம்பிக்கப்பட்ட திகதியிலிருந்து அல்லது கடைசியாக புதுப்பிக்கப்பட்ட திகதியிலிருந்து வட்டி கணிக்கப்படுவதுடன் முதிர்வின் போது கொடுப்பனவு செய்யப்படும். ஒவ்வொரு வைப்பிற்காகவும் நிலையான வைப்புப் பற்றுச்சீட்டொன்று வழங்கப்படும். உழைக்கப்பட்ட வட்டியுடன் சேர்த்து முதிர்வில் வைப்பின் சுயமான மீள் புதுப்பித்தலுக்கான அல்லது வட்டிக் கொடுப்பனவின் பின்னர் முதன்மை தொகையினை மீள் புதுப்பித்தலுக்கான ஏற்பாட்டு வசதிகள் கிடைக்கப்பெறுகின்றது.
- தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கு (வதிவோர்)/ (வதியாதோர்) குறைந்தபட்ச மீதி – ஐ.அ.டொ./ யூரோ/ ஸ்ரேலிங் பவுண் / அவுஸ்திரேலிய டொலர் 500 அல்லது யப்பான் யென் 60000/- தற்காலிகமாக விஜயம் செய்கின்ற அல்லது இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு எண்ணியுள்ள இலங்கையர் அல்லாதோர் தவிர கணக்குகள் தனியாக அல்லது இணைந்து திறக்கப்படலாம். இது பின்வரும் நியதிகளுக்கும், நிபந்தனைகளுக்கும் அமைவாக திறக்கப்படலாம். (9-ஆ, 9-இ, மற்றும் வரைவிலக்கண குறிப்பு)
தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கு (வதிவோர்) / (வதியாதோர்) நிலையான வைப்புக் கணக்கொன்றினை ஆரம்பிப்பதற்கு தேவையான ஆவணங்கள் யாவை?
- கணக்கு ஆரம்பிப்பதற்கான படிவம்
- அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணம் (கடவுச் சீட்டு/ தேசிய அடையாள அட்டை/ சாரதி அனுமதிப் பத்திரம்)
- பொறுப்பாணை பிரகடனம் (இணைப்பு I,II,III)
- நிறுவனங்கள் தொடர்பிலான ஆவணங்களுக்காக சர்வதேசப் பிரிவினை தொடர்பு கொள்ளவும்.
* கணக்கு ஆரம்பிக்கும் படிவத்தில் ”தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கு (வதியாதோர்)” அல்லது / தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கு (வதிவோர்) என கணக்கின் பெயரை தயவு செய்து குறிப்பிட்டு எமது தேசிய சேமிப்பு வங்கியின் உள்நாட்டிலுள்ள அல்லது வெளிநாட்டு பிரதிநிதியிடம் சமர்ப்பிக்கவும்.
தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கொன்றில் வைப்பிலிடக்கூடிய நாணயங்கள் யாவை?
கணக்குகள் ஐ.அ.டொ./ யூரோ/ ஸ்ரேலிங் பவுண் / அவுஸ்திரேலிய டொலர் அல்லது யப்பான் யென் ஆகிய நாணயங்களில் வழங்கப்படுவதாயினும் வேறு பெயர் குறிக்கப்பட்ட நாணயங்களும் கணக்குகளில் வைப்பில் இடுவதற்காக ஏற்றுக் கொள்ளப்படும்.
வருவாய்களை வட்டி வீதங்கள் எவ்வாறு பாதிக்கின்றன?
ரண்மசு தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கு மீதான வட்டி வீதங்கள் சந்தை வீதங்களை சார்ந்திருக்கும் என்பதுடன் எவ்வித அறிவித்தலும் இன்றி மாற்றங்களுக்கு உட்படும். ரண்மசு தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கு நிலையான வைப்புக் கணக்குகளின் மீதான வட்டி, சந்தை வட்டி வீதங்களை அடிப்படையாகக் கொண்டு வைப்பு/ மீள் புதுப்பித்தல் திகதியின் மீது குறிக்கப்படும். நீங்கள் கணக்கை பேணுகின்ற நாணயத்தில் வட்டி வரவு வைக்கப்படும்.
வைப்புகளை எவ்வாறு மேற்கொள்வது?
- வெளிநாடுகளில் உள்ள தேசிய சேமிப்பு வங்கி பிரதிநிதிகள் ஊடாக
- சர்வதேச வங்கித்தொழில் வழிகள் ஊடாக வெளிநாட்டில் இருந்து நேரடியாக கிடைக்கப்பெறுகின்ற உள்முக பண அனுப்பல்கள்
- வங்கியின் தொடர்புடைய வங்கிகள்/ பரிமாற்று இல்லங்கள்/ உலகளாவிய பணம் அனுப்பும் கம்பனிகளின் தேசிய சேமிப்பு வங்கியின் வழிகள் ஊடாக
- யூரோஜிரோ அஞ்சல் வலையமைப்பு ஊடாக
- தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கு, வதிவோர் இலங்கையர் அல்லாதோர் வெளிநாட்டு நாணயக் கணக்குகள், மற்றும் தேசிய சேமிப்பு வங்கியுடன் அல்லது ஏதேனும் உரிமம் பெற்ற வர்த்தக வங்கியுடன் பேணப்படுகின்ற வதியாதோர் இலங்கையர் அல்லாதோர் வெளிநாட்டு நாணயக் கணக்குகள் மற்றும் உரிமம் பெற்ற வர்த்தக வங்கியொன்றின் கரைகடந்த வங்கித் தொழில் பிரிவில் கணக்கு வைத்திருப்பவரினால் பேணப்படுகின்ற கணக்குகள் என்பவற்றிலிருந்து நிதியங்களை மாற்றல்.
- கணக்கு வைத்திருப்பவர் இலங்கைக்கு விஜயம் செய்கின்ற போது ஏற்புடையவாறு இலங்கை சுங்கத்திற்கான பிரகடனத்தின் மீது, கணக்கு வைத்திருப்பவரினால் நாட்டிற்கு கொண்டுவரப்படுகின்ற வங்கி வரைவுகள் அல்லது நாணயத் தாள்கள் வடிவில் வெளிநாட்டு நாணயத்தை தேசிய சேமிப்பு வங்கிக்கு நேரடியாக சமர்ப்பித்தல் ஆயினும், வரைவுகள் இலங்கைக்கு வெளியிலுள்ள வங்கி ஒன்றினால் வழங்கப்பட்டிருத்தல்
பணம் அனுப்பல் மேற்கொள்ளப்படுகின்ற போது பயனாளியின் கணக்கு மற்றும் வங்கி விபரங்கள் (கணக்கு இல, பெயர் மற்றும் வங்கி சுவிப்ட் குறியீடு – NSBALKLX) தொடர்பில் மிகச் சரியான தகவல்களை உறுதி செய்து கொள்ளவும்
* 2017.11.20 ஆம் திகதியிடப்பட்ட 2045/56 ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட நிர்ணயித்தல் நியதிகளில் உள்ள வதிவோர் பற்றிய வரைவிலக்கணம்
தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கு (வதியாதோர்) / (வதிவோர்) கணக்கிலிருந்து பணத்தை மீளப் பெறுவது எப்படி?
கணக்கு வைத்திருப்போரின் எழுத்து மூல கோரிக்கையின் மூலம் காசு, வங்கி வரைவு, தந்தி மாற்றல்கள் வடிவங்களில் மீள எடுப்புக்கள் கிடைக்கப் பெறுகின்றன.
தேவைப்படும் ஆவணங்கள் யாவை?
- தனிப்பட்ட விண்ணப்பம் (தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கு (வதியாதோர்) / (வதிவோர்)) மீள் எடுப்புப் படிவம்
- கணக்கு வைத்திருப்பவரின் எழுத்திலான அறிவுறுத்தல்களின் பேரில் மூன்றாம் தரப்பினர்களுக்கான கணக்கு மாற்றல்கள்
தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து கிடைக்கும் நன்மைகள் யாவை?
- தேசிய சேமிப்பு வங்கி ரூபாய் கணக்குகளுக்கான நிதிய மாற்றல்களுக்கு இலவசமான துணை நில் கட்டளை வசதி
- 3 மில்லியன் வரையான தனிப்பட்ட கடன்வசதி
- கவர்ச்சிகரமான வட்டி வீதத்தில் மீதியின் 80% (நிலையான வைப்புகள்) வரை ரூபா கடன்
- வங்கி வரைவுகளை வழங்குதல் மற்றும் தந்தி மாற்றல்களை நிறைவேற்றுதல்
- பெயர் குறித்தலுக்கான ஏற்பாடு
- சேமிப்பு கணக்கு மீதிகள் நிலையான வைப்புகளுக்கு மாற்றப்படக்கூடியதாக இருத்தல்
- இடர் நேர்வு அற்றது – 100% அரசாங்க உத்தரவாதம் அளிக்கப்பட்ட வங்கி
- கவர்ச்சிகரமான வட்டி வீதங்கள்
உங்களது கணக்கினை எவ்வாறு பரிசோதிப்பது?
- தொலைபேசி அழைப்பின் மூலம்
- கரும பீடத்தில்
- இணையவழி வங்கிச் சேவை ஊடாக
மேலதிக தகவல்களுக்கு தயவு செய்து தொடர்பு கொள்க
தேசிய சேமிப்பு வங்கி
சர்வதேசப் பிரிவு
இல. 70 1/1, செத்தாம் வீதி,
கொழும்பு 01
இலங்கை
தொ.பே. +94 11 2332043
+94 11 2332292
+94 11 2332018
+94 11 2332142
தொலைநகல் 94112332136
மின்னஞ்சல் manager.ibu@nsb.lk
அல்லது.
தேசிய சேமிப்பு வங்கி அழைப்பு நிலையம் +94 11 2379379 (24 மணி நேர சேவை)
எமது சுவிப்ட் குறியீடு ”NSBALKLX”
இதில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நடைமுறையில் உள்ள ஒழுங்குவிதிகளை அடிப்படையாகக் கொண்டதாகும் என்பதுடன் அறிவித்தலின்றி மாற்றத்திற்கு உட்படும்.