அஞ்சல் சேமிப்புகள்
இலங்கை அஞ்சல் அலுவலக சேமிப்பு வங்கியே தேசிய சேமிப்பு வங்கியின் முன்னோடியாக இருந்தது என்பதுடன் அதன் தாபகக் கோட்பாடுகளை தக்கவைத்து, தேசிய சேமிப்பு வங்கியானது நாடு முழுவதும் ஆழமாக ஊடருவியுள்ள அஞ்சல் வலையமைப்பின் ஊடாக கிராமிய சமூகத்தினுள் அதன் அனைத்து சேமிப்பு உற்பத்திகளையும் வழங்குகின்றது.
பொதுமக்களுக்கென அதிகதிகமான நன்மைகளை உறுதி செய்வதற்கு, தேசிய சேமிப்பு வங்கியானது அனைத்து அஞ்சல் சேமிப்பு கணக்குகளுக்கும் 1% மேலதிக வட்டி வீதத்தினை வழங்குகின்றது.
அஞ்சல் சேவையுடன் இணைந்த எமது சேமிப்புச் சாதனங்களில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்து உயர்வான வெகுமதிகளை அறுவடை செய்யுங்கள்.
தேசிய சேமிப்பு வங்கி அஞ்சல் சேமிப்பு கணக்கொன்றில் முதலிடுவதற்கு எளிதாக உமது அருகிலுள்ள அஞ்சல் அலுவலகத்திற்கு விஜயம் செய்யுங்கள் அல்லது எமது 24 மணி நேர சேவை அழைப்பு நிலையத்தை (+94112379379) தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்
தேசிய சேமிப்பு வங்கி, இலங்கை அரசாங்கத்தின் 100% உத்தரவாதம் அளிக்கப்பட்ட வங்கியாக எமது வாடிக்கையாளர்களின் வைப்புகளுக்கு இணையற்ற பாதுகாப்பொன்றினை வழங்குகின்றது.
தேசிய சேமிப்பு வங்கி அஞ்சல் சேமிப்புகள் – பொதுமக்களுக்கான வங்கிச் சேவை
நிபந்தனைகளுக்கு உட்பட்டது