சர்வதேச வங்கிச் சேவை
இலங்கையின் மிகவும் உறுதிமிக்க சேமிப்பு வங்கிக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.
தேசிய சேமிப்பு வங்கியானது வெளிநாட்டில் வாழ்கின்ற இலங்கையர்கள் தாம் கஷ்டப்பட்டு உழைத்த, மிகப்பெறுமதிவாய்ந்த வெளிநாட்டு நாணயங்களை இலங்கையிலுள்ள எந்த வங்கிக்கும் இணையற்ற வரலாற்றை கொண்ட வங்கியொன்றில் சேமிப்பதற்கான வாய்ப்பினை வழங்குகின்றது. இலங்கையருக்கும் இலங்கையில் வதிகின்ற இலங்கையரல்லாதோர் உள்ளடங்கலாக எமது பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வழிகள் ஊடாக சேமிப்பதற்கும் பணமனுப்புவதற்கும் நாம் மிகவும் சௌகரியமிக்க சேவைகளை வழங்குகின்றோம்.
எமது உற்பத்திகள் மற்றும் சேவைகள் சில
- “என்எஸ்பி ரன்மசு” – தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்குகள்- வதியாதோர்/வதிவோர் ஐ. அ. டொலர், யூரோ, ஸ்ரேலிங் பவுன், அவுஸ்திரேலிய டொலர் மற்றும் ஜப்பான் யென் ஆகிய நாணயங்களில் சேமிப்பு மற்றும் நிலையான வைப்பு வடிவிலான கணக்குகள்.
- உள்முக முதலீட்டுக் கணக்கு- வெளிநாட்டு பிரஜைகள்/ வெளிநாட்டு கூட்டு நிறுவனங்கள்/வெளிநாட்டு நிறுவனசார் முதலீட்டுளர்கள் மற்றும் வெளிநாட்டில் வதிகின்ற இலங்கையரும்கூட வெளிநாட்டு நாணயங்களிலும் இலங்கை ரூபாவிலும் முதலீடுகளை மேற்கோள்வதற்கு மிகப் பொருத்தமான கணக்காகும்.
நாட்டின் சனத்தொகையில் ஏறக்கறைய 2/3 ஆக காணப்படுகின்ற 19.3 மில்லியன் கணக்குகளை வைத்திருக்கும் இலங்கையருக்கு சேவையளிப்பதில் நாம் பெருமையடைகின்றோம். நாடுமுழுவதும் 262 கிளைளையும் , 4000 இற்கும் மேற்பட்ட அஞ்சல் அலுவலகங்ளையும் மற்றும் மாஸ்டர்/வீசா அட்டை வசதிகளையும் வழங்குகின்ற ஏரிஎம் (ATM) வலையமைப்பும் எமது அடைவினை உள்ளடக்குகின்றது.
உலகமுழுவதிலுமிருந்து விரைவாகவும், குறைந்த செலவிலும், பாதுகாப்பானதுமான பனவனுப்பல்களை இயலச் செய்கின்ற உலக அங்கீகாரம்பெற்ற பிரபல்யமிக்க இணையத்தளத்தினை அடிப்படையாககொண்ட பனவனுப்பல் வழிகளான எக்ஸ்பிரஸ் மணி (Express Money) , இன்ஸ்டன்ட் கேஸ் (Instant Cash), யுனிஸ்ரீம் (Unistream), ஈஸி ரெமிட் (Ez Remit), ட்ரான்ஸ்பாஸ்ட்(Transfast) மற்றும் வலுட்ரான்ஸ் (Valutrans) போன்றவற்றின் முகவர்களாகவும் நாம் தொழிற்படுகின்றோம்.
உலகம் பூராகவும் ஆயிரக்கனக்கான அஞ்சல் அலுவலகங்களை இணைக்கின்ற குறைந்த செலவுடைய, பாதுகாப்பான மற்றும் விரைவான பணஅனுப்புகின்ற முறைமையாக விளங்குகின்ற யூரோஜிரோ அங்கத்தவராகவும் நாம் விளங்குகின்றோம். தேசிய சேமிப்பு வங்கியானது கொரியா போஸ்ட், இஸ்ரேல் போஸ்ட், போஸ்ட் இத்தாலினே, சுவிஸ் போஸ்ட்/ போஸ்ட் பிரான்ஸ் மற்றும் டச் போஸ்ட் பேங்க் ஜேர்மனி போன்றவற்றுடன் தொடர்புகளை கொண்டுள்ளதுடன் அதேபோன்று ஸ்விப்ட் அங்கத்துவரொருமாகும் (தேசிய சேமிப்பு வங்கி (SWIFT குறியீடு – NSBALKLX)
மேலதிகத் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவேண்டியது
தேசிய சேமிப்பு வங்கி
சர்வதேசப் பிரிவு,
இல. 70/1/1, செதாம் வீதி, கொழும்பு 01,
இலங்கை.
தொ. பே. + 94 11 2332043
+940112332156
+ 94 11 2332292
+ 94 11 2332018
+ 94 11 2332142
+ 94 11 4932702
தொலைநகல் ;: +94112332136
மின்னஞ்சல்; :manager.ibu@nsb.lk
அல்லது
தேசிய சேமிப்பு வங்கி அழைப்பு நிலையம்: +94 11 2379379 (24 மணிநேர சேவை)
எமது SWIFT குறியீடு “NSBALKLX”