ஸ்திரீ
ஒவ்வொரு பெண்ணும் சௌகரியமிக்க வாழ்க்கையினையே விரும்புகின்றாள். பெண்களுக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சேமிப்புத் திட்டமான ”ஸ்திரீ” கணக்கினை வழங்குவதன் மூலம் தேசிய சேமிப்பு வங்கி அனைத்து மகளிரும் தமது கனவுகளை நனவாக்கிகொள்வதற்கான வாய்ப்பொன்றினை பெண்களுக்கும் வழங்குகின்றது. உமது பொறுப்புகளுக்கு தோள்கொடுப்பதற்கும் அத்துடன் சிறந்த எதிர்காலமொன்றின் வாரிசாக உங்களை உருவாக்குவதற்கும் உதவிக்கரம் நீட்டும் சேமிப்புத் திட்டமாகும்.
சேமிப்புகள் ரூபாய்களில் அன்றி சதங்களிலிருந்து ஆரம்பிக்கின்றன
நீங்கள் பிரியமான சகோதரியாக, கவனிக்கின்ற மனைவியாக, அன்பு நிறைந்த அன்னையாக, அறிவு நிறைந்த பாட்டியாக, மதிப்புமிக்க சீமாட்டியாக உமது வாழ்வில் நீங்கள் ஆசிரியையாக, தாதியாக, வைத்தியராக வேறுபட்ட வகிபாகங்களை ஆற்றக்கூடியவர்களாக இருக்கலாம். நீங்கள் யாராக இருப்பினும் உங்களது இறுதிக் கனவு ”சதம் சதமாக, ரூபாய் ரூபாயாக” உமது குடும்பத்தின் பொருளாதாரத்தினை வலுப்படுத்துவதாகும் அத்துடன் உமது குடும்பத்திற்காக சுவர்க்காபுரி போன்ற அரண்மனையொன்றினை கட்டுகின்ற கனவு ”ஸ்திரீ” கணக்கின் மூலம் நனவாகும்.
உமது கனவை நனவாக்கிக் கொள்ளுங்கள்
பெண் ஒருவராக நீங்கள், செய்ய விரும்புவது ஏராளம் : நீங்கள் ஆபரணங்களுடன் ஜொலிப்பதற்கு- வனப்புமிக்க இல்லம் ஒன்றினை பேணுவதற்கு அல்லது உமது பிள்ளைகளுக்கு மிகச் சிறந்த கல்வியினை வழங்குவதற்கு நீங்கள் விரும்புவீர்கள். அது மாத்திரமன்றி சாதாரண வட்டி வீதத்தினை விட 0.5% குறைவாக உமது தங்க ஆபரணங்களை அடகு வைப்பதன் மூலம் உமது அவசர நிதித் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ளலாம்.
புதிய பெறுமதி சேர்த்தல்கள்
- திருமண அன்பளிப்பாக ரூபா 10,000/- பணப் பரிசு
- குழந்தை ஒன்றுக்கு ரூபா 50,000/- முகப் பெறுமதியுடன் கூடிய இலவச ”பிரார்த்தனா” சான்றிதழ்
- ஏரீஎம் / மாஸ்டர் / வீசா / பற்று அல்லது கொள்வனவு அட்டை வசதி
- முதல் தடவை பட்டம் பெறுதலுக்காக ரூபா 1,500/- இற்கான பணப் பரிசு
- 25வது திருமண ஆண்டு நிறைவின் போது ரூபா 10,000/- பணப் பரிசு
நிபந்தனைகளுக்கு உட்பட்டது*
மேலதிக விபரங்களுக்கு தேசிய சேமிப்பு வங்கியின் 24 மணி நேர சேவை அழைப்பு நிலையத்தை (+94112379379) தொடர்பு கொள்க