தேசிய சேமிப்பு சான்றிதழ்
தேசிய சேமிப்பு சான்றிதழ் என்றால் என்ன?
தேசிய சேமிப்புச் சான்றிதழ் என்பது முதிர்ச்சிக்காக காத்திருக்காமல் வட்டியை உடனடியாக கொடுப்பனவு செய்கின்ற சேமிப்பு உற்பத்தியொன்றாகும்.
ரூபா 500/- ரூபா 1,000/-, ரூபா 5,000/- ரூபா 10,000/- மற்றும் ரூபா 25,000/- பெறுமதி கொண்ட வேறுபட்ட பெறுமதிகளில் 3, 6, 12, 24, 36, மற்றும் 48 மாதங்களுக்கு அவை கிடைக்கப் பெறுவதனால் தேசிய சேமிப்பு சான்றிதழை யாரும் பெற்றுக் கொள்ள முடியும்.
தேசிய சேமிப்பு வங்கிச் சான்றிதழ் ஒன்றை நீங்கள் ஏன் வாங்க வேண்டும்?
முதிர்ச்சியடைகின்ற போது உமது சான்றிதழை நீங்கள் சமர்ப்பிப்பீர்களாயின் உங்களது வட்டி முதிர்வுத் திகதியிலிருந்து கொடுப்பனவு செய்யப்படுகின்றது.
உங்களது சேமிப்பு சான்றிதழுடன் நீங்கள் செய்யக்கூடியது ஏராளம். ……. ஏழு வயதிற்கு மேற்பட்டோர் வேறு எந்த வங்கியும் வழங்காத நலன் ஒன்றான தேசிய சேமிப்பு சான்றிதழினை கொள்வனவு செய்யலாம். முதிர்வுத் திகதிக்கு முன்னர் சான்றிதழ்கள் கையளிக்கப்படுகின்ற போது பூர்த்தியடைந்த ஒவ்வொரு மாதத்திற்கும் குறைக்கப்பட்ட வட்டி வீதம் ஒன்று கொடுப்பனவு செய்யப்படும்.
இதனை உங்களது அன்புக்குரியவர்களுக்கு அன்பளிப்பாகவும் வழங்கலாம். தேசிய சேமிப்பு சான்றிதழ்களை நாடு பூராகவும் உள்ள எந்த ஒரு தேசிய சேமிப்பு வங்கிக் கிளையிலும் பெற்றுக் கொள்ளலாம்.
மேலதிக விபரங்களுக்கு தேசிய சேமிப்பு வங்கியின் 24 மணி நேர சேவை அழைப்பு நிலையத்தை (+94112379379) தொடர்பு கொள்க.