NSB EASY அட்டைகள்
இது, தேசிய சேமிப்பு வங்கியின் நிலையான வைப்புக் கணக்கு வைத்திருப்போருக்கு பிரத்தியேகமான கடன் வசதிகளை வழங்குகின்ற அட்டையொன்றாகும். இது, உலகளவில் ஏற்றுக் கொள்ளப்படும் என்எஸ்பி NSB Easy உடன் உமது நிலையான வைப்பினை அல்லது அதன் வட்டி வளர்ச்சியை பாதிக்காத வகையில் உங்களது இன்றைய தேவைகளை நிறைவு செய்கின்றது. உங்களது பணத்தை உமது நிலையான வைப்பில் முடக்கி வைக்கத் தேவையில்லை. NSB Easy மூலம் உங்களது கனவுகளை நனவாக்கிக் கொள்ளுங்கள். உங்களது வாழ்வை இன்றும் அதே போன்று எதிர்காலத்திலும் ஒளிமயமாக்குங்கள்.
NSB Easy என்றால் என்ன?
NSB Easy என்பது நிலையான வைப்பு வீதத்திற்கு மேல் 3% குறைந்த வருடாந்த வட்டி வீதத்தில் உங்களது நிலையான வைப்புக்கு எதிராக வழங்கப்படும் மாஸ்டர் அட்டை கடன் வசதியாகும்.
”NSB Easy” என்றழைக்கப்படுவது ஏன்?
உமது வருமானத்தை உறுதிப்படுத்தத் தேவையில்லை, வெறுமனே உமது வைப்பிற்கு எதிராக NSB Easy அட்டைக்காக விண்ணப்பிக்கலாம். எவ்வித கெடுபிடிகளும் அற்றவை. மேலும் உமது கைப்பைகளில் பல எண்ணிக்கையான அட்டைகளை நீங்கள் கொண்டு செல்லத் தேவையில்லை. தற்போதுள்ள உமது NSB மாஸ்டர் அட்டையுடன் NSB Easy வசதியினை நீங்கள் எளிதாக இணைத்துக்கொள்ளலாம்.
எவ்வாறு இது செயற்படுகின்றது, இதனை எதற்காக பயன்படுத்தலாம்?
- வைப்பிலிடப்பட்ட தொகையின் உயர்நதபட்சம் 80% கடன் வரையறை அட்டை வழங்கப்படும். அட்டை ஒன்றிற்கான அதிகூடிய கடன் வரையறை ரூபா 1,000,000.00 ஆகும்.
- தேசிய சேமிப்பு வங்கியின் ATM உட்பட மாஸ்டர் குறியீட்டினை கொண்டுள்ள எந்தவொரு ATM இலிருந்தும் பணம் மீள் எடுக்கலாம். மீள எடுக்கப்பட்ட தொகைக்கு மாத்திரம் மீள எடுக்கப்பட்ட திகதியிலிருந்து வட்டி கணிக்கப்படும்.
- உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வணிகர்களிடமிருந்து மாஸ்டர் அட்டைக்கான பொருட்களை கொள்வனவு செய்யலாம் சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
- வெளிநாட்டு பயணங்களின் போது பயன்படுத்தக்கூடியது.
ஏன் நீங்கள் “NSB Easy” இனை தெரிவு செய்ய வேண்டும்?
- வருடாந்தக் கட்டணம் இல்லை
- கடன் வரையறை விஞ்சுவதற்கு கட்டணம் இல்லை
- தாமதமான கொடுப்பனவுகளுக்கான கட்டணம் இல்லை
- முத்திரை தீர்வை இல்லை
- ஏதேனும் மேலதிக கட்டணமோ விதிப்பனவோ இன்றி 10 தேசிய சேமிப்பு வங்கி கணக்குகளை NSB Easy அட்டைகளுடன் இணைக்க முடியும்
- நீங்கள் விரும்பியது போன்று தீர்ப்பனவுகளை மேற்கொள்ளலாம்
இவ்வசதியினை யார் பெற்றுக் கொள்ளலாம்?
சுயமாக புதுப்பிக்கப்படுகின்ற அடிப்படையின் கீழ் 12 மாதங்கள் அல்லது அதற்கு கூடியகாலத்திற்காக (மாதாந்த அல்லது வருடாந்த வட்டி வீதங்களில்) நிலையான வைப்பொன்றினை பேணுகின்ற 18 வயதிற்கு மேற்பட்ட தனிப்பட்ட அல்லது இணைந்த கணக்கு வைப்போர் இவ்வட்டையினை பெற்றுக் கொள்வதற்கு தகுதியுடையவர்கள் ஆவர்.
நிபந்தனைகளுக்கு உட்பட்டது
எமது 24 மணி நேர சேவை அழைப்பு நிலையத்தை (+94112379379) தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.