உள்முக முதலீட்டுக் கணக்கு (IIA) (SFIDA & SIA என முன்னர் அறியப்பட்டது)
கணக்கினை யார் ஆரம்பிக்கலாம்?
வெளிநாட்டவர்கள், இலங்கைக்கு வெளியில் கூட்டிணைக்கப்பட்டுள்ள நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனசார் முதலீட்டாளர்கள், வெளிநாட்டு பிராந்திய நிதியங்கள் மற்றும் வெளிநாட்டில் வாழ்கின்ற எமது சொந்த இலங்கையர்கள்
- இலங்கையர் அல்லாத இலங்கையில் அல்லது இலங்கைக்கு வெளியில் வதிபவர்
- இலங்கைக்கு வெளியில் வதிகின்ற இலங்கைப் பூர்வீகமாக கொண்ட இலங்கையர் அல்லாதவர்
- இலங்கைக்கு வெளியில் வதிகின்ற இலங்கைப் பிரஜை
- இலங்கைக்கு வெளியில் கூட்டிணைக்கப்பட்டுள்ள கம்பனி
- இலங்கைக்கு வெளியில் தாபிக்கப்பட்டுள்ள நாட்டு அல்லது பிராந்திய நிதியங்கள், பரஸ்பர நிதியங்கள், கூறு நம்பிக்கைகள் மற்றும் ஏனைய நிறுவனசார் முதலீட்டாளர்கள்
நீங்கள் முதலிடக்கூடிய வழிகள் யாவை?
- பங்குகள் (பட்டியலிடப்பட்டவை மற்றும் பட்டியலிடப்படாதவை)
- திறைசேரி முறிகள்
- திறைசேரி உண்டியல்கள்
- கூறு நம்பிக்கை அலகுகள்
- தொகுதிக் கடன்கள்
- வெளிநாட்டு நாணயத்தில் அல்லது இலங்கை ரூபாவில் சேமிப்புகள் /நிலையான வைப்புகள்
- 2007 இன் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு கம்பனியின் கீழ் வியாபாரத் தளம் ஒன்றினை நிறுவுதல்
- அசையாத ஆதனம்
- கடன் பெறுநருக்கு செலாவணிக் கட்டுப்பாட்டாளரினால் வழங்கப்பட்ட விசேட அனுமதியின் கீழ் வதிவோருக்கு வழங்கப்படும் கடன்கள்
உள்முக முதலீட்டுக் கணக்குகளின் வகைகள்
- சேமிப்பு கணக்கு
- நிலையான வைப்புக் கணக்கு
குறைந்தபட்ச சேமிப்பு கணக்கு நிலுவைகள்
உள்முக முதலீட்டுக் கணக்கு | |||
நாணயம் | ஐ.அ.டொ./ யூரோ/ ஸ்ரேலிங் பவுண் / அவுஸ்திரேலிய டொலர் | யப்பான் யென்
|
ரூபா |
குறைந்தபட்ச மீதி | 25/- | 12000/- | 500/- |
நிலையான வைப்புக் கணக்குகளின் குறைந்த பட்ட மீதிகளும் வகைகளும்
உள்முக முதலீட்டுக் கணக்கு | நிலையான வைப்பு வகை | குறைந்த பட்ச மீதி |
வெளிநாட்டு நாணயம் | 1,3,6,மற்றும் 12 முதிர்ச்சி மாதங்கள் | ஐ.அ.டொ./ யூரோ/ ஸ்ரேலிங் பவுண் / அவுஸ்திரேலிய டொலர் 500/- மற்றும் யப்பான் யென் 60,000/- |
ரூபா | ஒரு மாத முதிர்வு | 500,000/- |
3,6,12,24,36, மற்றும் 60 மாத முதிர்வு | 25,000/- | |
12 மாத முதிர்வு | 25,000/- |
உள்முக முதலீட்டுக் கணக்கொன்றினை ஆரம்பிப்பதற்கு தேவையான ஆவணங்கள் யாவை?
தகைமையுடைய முதலீட்டாளர்களுக்கு மத்தியில் இணைந்த கணக்குகள் பேணப்படலாம்.
- சேமிப்பு / நிலையான வைப்புக்களான கணக்கு ஆரம்பித்தல் படிவம்
- பொறுப்பாணை பிரகடனம் (பிஇணைப்பு I,II,II)
- நிறுவனங்கள் தொடர்பிலான ஆவணங்களுக்கான சர்வதேச பிரிவினை தொடர்பு கொள்ளவும்
வைப்புகளை எவ்வாறு மேற்கொள்வது?
- வெளிநாடுகளில் உள்ள தேசிய சேமிப்பு வங்கி பிரதிநிதிகள் ஊடாக
- சர்வதேச வங்கித்தொழில் வழிகள் ஊடாக வெளிநாட்டில் இருந்து நேரடியாக கிடைக்கப்பெறுகின்ற உள்முக பண அனுப்பல்கள்
- வங்கியின் தொடர்புடைய வங்கிகள்/ பரிமாற்று இல்லங்கள்/ உலகளாவிய பணம் அனுப்பம் கம்பனிகளின் தேசிய சேமிப்பு வங்கியின் வழிகள் ஊடாக
- யூரோஜிரோ அஞ்சல் வலையமைப்பு ஊடாக
- தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கு, வதிவோர் இலங்கையர் அல்லாதோர் வெளிநாட்டு நாணயக் கணக்குகள், மற்றும் தேசிய சேமிப்பு வங்கியுடன் அல்லது ஏதேனும் உரிமம் பெற்ற வர்த்தக வங்கியுடன் பேணப்படுகின்ற வதியாதோர் இலங்கையர் அல்லாதோர் வெளிநாட்டு நாணயக் கணக்குகள் மற்றும் உரிமம் பெற்ற வர்த்தக வங்கியொன்றின் கரைகடந்த வங்கித் தொழில் பிரிவில் கணக்கு வைத்திருப்பவரினால் பேணப்படுகின்ற கணக்குகள் என்பவற்றிலிருந்து நிதியங்களை மாற்றல்.
- கணக்கு வைத்திருப்பவர் இலங்கைக்கு விஜயம் செய்கின்ற போது ஏற்புடையவாறு இலங்கை சுங்கத்திற்கான பிரகடனத்தின் மீது, கணக்கு வைத்திருப்பவரினால் நாட்டிற்கு கொண்டுவரப்படுகின்ற வங்கி வரைவுகள் அல்லது நாணயத் தாள்கள் வடிவில் வெளிநாட்டு நாணயத்தை தேசிய சேமிப்பு வங்கிக்கு நேரடியாக சமர்ப்பித்தல் ஆயினும், வரைவுகள் இலங்கைக்கு வெளியிலுள்ள வங்கி ஒன்றினால் வழங்கப்பட்டிருத்தல்
உள்முக முதலீட்டு கணக்கிலிருந்து பணத்தினை எவ்வாறு மீள எடுப்பது / அனுப்புவது?
- இலங்கை ரூபாய்களில் இலங்கையில் பகிர்ந்தளித்தல்
- கணக்கு வைத்திருப்பவர் சார்பில் வெளிமுக பண அனுப்பல்கள்
- வங்கியுடனான சேமிப்பாக / நிலையானதாக வைக்கப்பட்டுள்ள வைப்புக்கள் உள்ளடங்கலாக இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட அனுமதிக்கப்பட்ட முதலீட்டு தெரிவுகளுக்கான மாற்றல்கள்
- இணையப் பெற்ற வருவாயுடன் முதலிடப்பட்ட மூலதனத்தினை நாட்டுக்கு திருப்பி அனுப்புதல்
உமது கணக்கினை நீங்கள் எவ்வாறு பரிசோதிக்கலாம்?
- இணையத்தள வங்கிச் சேவை ஊடாக
மேலதிக தகவல்களுக்கு தயவு செய்து தொடர்பு கொள்க
தேசிய சேமிப்பு வங்கி
சர்வதேச பிரிவு
இல. 70 1/1, செத்தாம் வீதி,
கொழும்பு 01
இலங்கை
தொ.பே. +94 11 2332043
+94 11 2332292
+94 11 2332018
+94 11 2332142
தொலைநகல் 94112332136
மின்னஞ்சல் manager.ibu@nsb.lk
அல்லது
தேசிய சேமிப்பு வங்கி அழைப்பு நிலையம் 94 11 2379379 (24 மணி நேர சேவை)
எமது சுவிப்ட் குறியீடு ”NSBALKLX”