பிரார்த்தனா
தமது பிள்ளைக்களின் ஒளிமயமான மற்றும் பாதுகாப்பான எதிர்காலம் ஒன்று பற்றி சிந்திக்கின்ற அனைவருக்குமான தேசிய சேமிப்பு வங்கியின் பிரார்தனா சேமிப்புச் சான்றிதழ்கள். பிரார்த்தனா சேமிப்புச் சான்றிதழில் இன்றே முதலிடுவதன் மூலம் உமது பிள்ளைகள் வளர்கின்ற போது உயர்கல்வியாக இருக்கட்டும் அல்லது வெளிநாட்டு பயணமாக இருக்கட்டும் எதுவாயினும் உமது பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுங்கள்.
பிரார்த்தனா சேமிப்பு சான்றிதழ் என்பது யாது?
- தேசிய சேமிப்பு வங்கியின் பிரார்த்தனா சான்றிதழ், பிள்ளை 16 வயதை அடைகின்ற போது கொடுப்பனவு செய்யத்தக்க ரூபா 5,000/- ரூபா 10,000/- ரூபா 25,000/- ரூபா 50,000/- மற்றும் ரூபா 100,000/- கொண்ட பெறுமதிகளில் கிடைக்கப்பெறும்.
- முகப் பெறுமதியின் ஒரு பகுதியை மாத்திரம் எளிதாக இன்றே கொடுப்பனவு செய்யுங்கள். ஆயினும் உமது பிள்ளை 16 வயதை அடையும் போது முழுமையான முகப் பெறுமதியினை பெற்றுக் கொள்ளும்.
- கொள்வனவு செய்யப்பட்ட சான்றிதழ், வட்டி தளம்பல்கள் மூலம் பாதிக்கப்படாது.
பிரார்த்தனா எவ்வாறு செயற்படுகின்றது?
- சான்றிதழின் கொள்வனவு விலை, வட்டி வீதத்தின் மாற்றங்கள் மற்றும் குழந்தையின் வயதில் மாற்றம் என்பவற்றுக்கு அமைவாக மாறுபடலாம் ஆயினும் முகப் பெறுமதி மாறாது இருக்கும்.
தேசிய சேமிப்பு வங்கி பிரார்த்தனா கணக்கொன்றில் முதலிடுவதற்கு எளிதாக உமது அருகாமையில் உள்ள தேசிய சேமிப்பு வங்கி கிளைக்கு வருகை தாருங்கள் அல்லது எமது 24 மணி நேர சேவை அழைப்பு நிலையத்தை (+94112379379) தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்
தேசிய சேமிப்பு வங்கி, இலங்கை அரசாங்கத்தின் 100% உத்தரவாதம் அளிக்கப்பட்ட வங்கியாக எமது வாடிக்கையாளர்களின் வைப்புகளுக்கு இணையற்ற பாதுகாப்பொன்றினை வழங்குகின்றது.
தேசிய சேமிப்பு வங்கி, இலங்கை அரசாங்கத்தின் 100% உத்தரவாதம் அளிக்கப்பட்ட வங்கியாக எமது வாடிக்கையாளர்களின் வைப்புகளுக்கு இணையற்ற பாதுகாப்பொன்றினை வழங்குகின்றது.
நிபந்தனைகளுக்கு உட்பட்டது.