பஸ் அவுருது கணக்கு
நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தின் ஒரு பகுதியினை கவர்ச்சிகரமான வட்டி வீதங்களை வழங்குகின்ற ”பஸ் அவுருது சேமிப்புக் கணக்கு” என்ற எமது விசேட நீண்ட கால கணக்கில் மாதாந்த அடிப்படையில் சேமியுங்கள்.
இக்கணக்கினை யார் தொழிற்படுத்த முடியும்?
- 16 வயதிற்கு மேற்பட்ட இலங்கையர் எவரும் இக்கணக்கினை ஆரம்பித்து தொழிற்படுத்தலாம்.
- தனிப்பட்டவராக, இணைந்த அல்லது சிறுவர் கணக்கு வைத்திருப்பவராக கணக்கினை ஆரம்பிக்கலாம்.
- எனினும், இக்கணக்கை நிறுவனம் சார்ந்த, நீதிமன்ற, பிணைய அல்லது நம்பிக்கை பொறுப்பு கணக்குகளாக ஆரம்பிக்கப்பட முடியாது
எவ்வாறு கணக்கினை ஆரம்பித்து பேணுவது?
- ரூபா 1000/-, ரூபா 2000/-, ரூபா 3000/-, ரூபா 4000/-, ரூபா 5000/- அல்லது ரூபா ஆயிரத்தின் மடங்குகளை கொண்ட மாதாந்த வைப்பொன்றின் மூலம் ஆரம்பிக்கப்படலாம் என்பதுடன் கணக்கின் காலம் 5 வருடங்களாக இருக்கும் (60 மாதங்கள்) *
- இணங்கிய மாதாந்த வைப்புத் தொகை தவறாது ஒவ்வொரு மாதத்தின் ஏதாவது தினத்தில் கணக்கிற்கு வரவு வைக்கப்பட வேண்டும்*
- நாளாந்தம் வட்டி கணிப்பிடப்பட்டு மாதாந்த அடிப்படையில் கணக்கிற்கு வரவு வைக்கப்படும்.
கிடைக்கப் பெறும் விசேட நன்மைகள் யாவை?
- மாதாந்த வைப்புத் தொகையின் அடிப்படையில் உமது வட்டித் வீதங்கள் நிர்ணயிக்கப்படும். உயர் வைப்புத் தொகைகளுக்கு உயர்வான வட்டி வீதங்கள் வழங்கப்படும்.
- உமது அனைத்து சேமிப்புகளுக்கும் அதன் மூலம் உழைக்கப்படும் வட்டிக்கும் 100% அரசாங்க உத்தரவாதம்
* நிபந்தனைகளுக்கு உட்பட்டது
மேலதிக விபரங்களுக்கு தேசிய சேமிப்பு வங்கியின் 24 மணி நேர சேவை அழைப்பு நிலையத்தை (+94112379379) தொடர்பு கொள்க