நாட்டின் முன்னணி சேமிப்பு வங்கியாக தேசிய சேமிப்பு வங்கியானது திறைசேரி உண்டியல்கள், திறைசேரி முறிகள் மற்றும் ஏனைய அரசாங்க சாதனங்கள் போன்ற அதிக பாதுகாப்புமிக்க அரசாங்கப் பிணையங்களில் அதன் சொத்துகளின் 60% இனை முதலீடு செய்வதற்கு அதன் நியதிச் சட்டம் மூலம் தேவைப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கப் பிணையங்களில் உள்ள முதலீடுகள் வங்கியின் சொத்து முகாமைத்துவப் பிரிவினால் கையாளப்படுகின்றன.
வங்கியானது, அதன் நிதியங்களின் எஞ்சியவற்றை மூன்று முக்கிய விடயங்களில் ஈடுபடுத்துகின்றது. அவையாவன,
- நிதியியல் நிறுவனங்களுக்கான நேரடி கடன் வழங்கல்
- கூட்டுக் கடன்கள்
- கருத்திட்ட கடன் வழங்கல்
இந்நடவடிக்கைகளை பிரதானமாக கூட்டுக் கடன்களை கையாளுவதற்கு வங்கியினால் கருத்திட்ட நிதிப் பிரிவொன்று நிறுவப்பட்டுள்ளது.
நாம் உட்கட்டமைப்பு கருத்திட்டங்களை விரும்புவதாயினும், எவ்வகையான கருத்திட்டத்தினையும், செயன்முறையின் எக்கட்டத்திலும் அதாவது ஆரம்பித்தல், விரிவுபடுத்தல், முன்னெடுக்கப்படும் கருத்திட்டங்கள் போன்றவற்றை பொறுப்பேற்கின்றோம்.
நாம் நெகிழ்வுமிக்க மதிப்பீட்டு மூலப் பிரமாணங்களை பின்பற்றுவதுடன் எமது வட்டி வீதங்கள் பேரம் பேசக்கூடியவையும் மிகவும் போட்டியானதுமாகும். கருத்திட்ட நிதிக் கடன்களுக்காக நாம் கடன் செயன்முறைப்படுத்தலையும் தொடர்புடைய ஆவணப்படுத்தலையும் குறுகிய காலத்தினுள் வசதிப்படுத்துகின்றோம். செயன்முறைப்படுத்தல் கட்டணம் மிகவும் சிறியதாகும்.
வாய்ப்புமிக்க சேவைநாடிகள் அவர்களுக்கான கடன்வசதிகளை எமது சிரேஷ்ட முகாமைத்துவத்திற்று எழுதி கோரமுடியும் அல்லது சந்தித்து கலந்துரையாடலாம்.
பிரதான தொழிற்பாடுகள்
வங்கித் தொழில் நிறுவனங்களுக்கும் அவற்றின் துணை நிறுவனங்களுக்கும் நேரடிக் கடன் வழங்கல்.
நாட்டின் முன்னணி சேமிப்பு நிறுவனமாக தேசிய சேமிப்பு வங்கியானது, அதன் நிதியங்களை பல்வேறு வகையான பன்முகப்படுத்தப்பட்ட வடிவங்களில் ஈடுபடுத்துகின்றது. பிரதானமாக அவை,
அரசாங்கப் பிணையங்கள்
நியதிச் சட்டத்தின் மூலம் தேசிய சேமிப்பு வங்கி வைப்புகளுக்காக அரசாங்க உத்தரவாதம் ஒன்றினை நியாயப்படுத்துகின்ற மற்றும் உறுதிப்படுத்துகின்ற திறைசேரி உண்டியல்கள், திறைசேரி முறிகள் மற்றும் அரசாங்கப் பத்திரங்கள் போன்ற உயர் பாதுகாப்புமிக்க பிணையங்களில் அதன் சொத்துகளின் குறைந்த பட்சம் 60% இனை ஈடுபடுத்துவதற்கு பொறுப்பாணை அளிக்கப்பட்டுள்ளது.
கருத்திட்ட நிதி
இரண்டாவது பாரிய ஈடுபடுத்தலானது பல்வேறு கருத்திட்டங்களுக்கு நிதியளிப்பதாகும். தேசிய சேமிப்பு வங்கி பிரதானமாக நாட்டின் நீண்ட கால அபிவிருத்தி திட்டங்களுக்கு கடன் வழங்குகின்றது. அனேகமான ஏனைய வங்கிகள் இடமளிக்கும் நிலையில் காணப்படாத முக்கியமாக உட்கட்டமைப்பு அபிவிருத்திக் கருத்திட்டங்களுக்கு நிதியளிப்பது வங்கியின் மகுட வாசகமாக தோற்றம் பெற்றுள்ளது.
ஒழுங்கு முறைப்படுத்தல் தேவைப்படுத்தல்களுடன் இணங்கியொழுகுவதற்கு இக்கடன்களில் அனேகமானவை கூட்டுக் கடன் வாயிலாக காணப்படுகின்றன. எனவே, வரையறைகளும் மட்டுப்பாடுகளும் ஒழுங்கு முறைப்படுத்தல் தேவைகளினுள் காணப்படுகின்றமையினால் தேசிய சேமிப்பு வங்கியானது நாட்டிலுள்ள ஏனைய வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் மொத்த விற்பனை கடன் வழங்கலை மேற்கொள்கின்றது.
கூட்டுக் கடன்களை ஒழுங்கமைத்தல்
நீடித்து நிலைக்கின்ற கருத்திட்டங்களுக்காக சாத்தியமான அபேட்சகர்களுக்கு கூட்டுக் கடன் வாயிலாக கடன் வசதிகளை எமது கருத்திட்ட நிதிப் பிரிவு ஒழுங்கமைக்கின்றது.
முகவர்களாக செயற்படுதல்
கடன் வழங்குநர்கள் மற்றும் கடன் பெறுநர்/ கடன் பெறுநர்கள் இற்கு இடையில் தீர்ப்பனவு மற்றும் கொடுக்கல் வாங்கல்களை கூட்டிணைக்கின்ற கூட்டுக் கடன் வசதிகளுக்கான முகவர் வகிபாகம் ஒன்றினை தேசிய சேமிப்பு வங்கி ஆற்றுகின்றது.
கட்டமைக்கப்படும் நிதியியல் வசதிகள்
நிதியளித்தலுக்கு மேலதிகமாக சேவை நாடியின் தேவைப்பாடுகளையும் கருத்திட்டத்தின் தன்மை மற்றும் நீடித்து உழைக்கும் தன்மையினையும் சார்ந்து தேசிய சேமிப்பு வங்கி சேவை நாடியின் தேவைகளுக்கு பொருத்தமாக அதாவது தொகுதிக் கடன்கள், சொத்துகள் துணையளிக்கப்பட்ட குறிப்புகள், அடகு துணையளிக்கப்பட்ட குறிப்புகள் போன்ற வசதியினை கட்டமைக்கின்றது.
பெறுதி உற்பத்திகள்
வட்டி வீத மாற்றல் உடன்படிக்கையினை கைச்சாத்திடுவதன் ஊடாக தமது சந்தை இடர் நேர்வினை காப்பிடுவதற்கு நாம் சேவை நாடிகளுக்கு உதவுகின்றோம்.
பிணையம்
பிணையமானது, கடன் வழங்குநர்களுக்கு பாதுகாப்பான வால்வுகளை வழங்குகின்ற போதிலும் கருத்திட்டங்களுக்காக கடன் வழங்குவதில் காணப்படும் எமது முக்கிய மூலப் பிரமாணம் பிணையம் அன்று. அது கருத்திட்டத்தின் வலிமையாகும். பிணையம் அனேகமாக பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றது.
உத்தரவாதம்
அசையாத சொத்துகளின் ஈடு
கருத்திட்ட சொத்துகள் மீதான ஈடு
கிடைக்கப் பெற வேண்டியவைகள் மீதான சொத்து மேல் உரிமை
கருத்திட்டத்தின் நேரடி பண அனுப்பல்
என்ன வகையான கருத்திட்டங்கள்?
எமது ஏற்பு உட்கட்டமைப்பு கருத்திட்டங்களுக்கானதாயினும், நாம் உட்கட்டமைப்பு கருத்திட்டங்களை விரும்புவதாயினும், எவ்வகையான கருத்திட்டத்தினையும் செயன்முறையின் எக்கட்டத்திலும் அதாவது ஆரம்பித்தல், விரிவுபடுத்தல், முன்னெடுக்கப்படும் கருத்திட்டங்கள் போன்றவற்றை கருத்திற் கொள்கின்றோம்.
மதிப்பீட்டிற்கான மூலப் பிரமாணம்
ஒழுங்குமுறைப்படுத்தலுடனான இணங்குவித்தல்
முகாமைத்துவத்தின் முகக் குறிப்பு
கருத்திட்டத்தின் முகக் குறிப்பு
பிணையம்
வசதியினை எவ்வாறு பெற்றுக் கொள்ளலாம்?
கருத்திட்ட நிதியளித்தல் நோக்கங்களுக்காக தேசிய சேமிப்பு வங்கி, பங்குடைமை அல்லது தனிஉரிமை கருத்திட்டங்களை கருத்திற் கொள்வதில்லை. ஒவ்வொரு கருத்திட்டமும் ஒன்றில் இருந்து மற்றொன்று வேறுபடுவதனால் குறித்துரைக்கப்பட்ட கடன் விண்ணப்பப்படிவும் எதுவும் இல்லை. எனவே, தகவல் மாத்திரம் தேவைப்படுகின்றது.
எவ்வாறாயினும், சாத்தியமான எவரேனும் சேவை நாடி எமக்கு எழுதலாம் அல்லது வசதி பற்றி கலந்துரையாடுவதற்கு எமது சிரேஷ்ட முகாமைத்துவத்தினை சந்திக்கலாம்.
சாத்தியமான வட்டி வீதங்கள் யாவை?
கடன் வசதிக்கான நியதிகள் பேசித் தீர்மானிக்கப்படக்கூடியவை என்பதுடன் பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளக்கூடிய அடிப்பைடயில் இணங்கப்படுகின்றன. எமது வட்டி வீதங்கள் மிகவும் போடடிமிக்கவை என்பது மிகவும் கருத்திற் கொள்ளப்பட வேண்டும். பொதுவாக கடன் வசதிகளுக்கான நியதிகள்,
- மாறத்தக்க வீதம் ஒன்றில் விலையிடல்
- பொதுவாக காலாண்டு மற்றும் அரையாண்டு போன்ற சுட்டெண் வீத மீள் விலையிடல் மீதான இலாபம்
- கடுமையான சூழ்நிலைகளின் தாக்கங்களை தவிர்ப்பதற்கு நாம் வசதிக்கான உச்ச மற்றும் தள வீதம் ஒன்றினை விதிக்கின்றோம்.
- இலாபம் கருத்திட்டத்தினதும் ஊக்குவிப்பாளரினதும் இடர் நேர்வு தோற்றப்பாட்டினை அடிப்படையாகக் கொண்டது.
- பொதுவாக கடன், மூலதனத்தை மீள் கொடுப்பனவு செய்வதற்கு சாதகமான காசுப் பாய்ச்சல் உருவாக்கத்தினை இயலச் செய்வதற்கான சலுகைக் காலம் ஒன்றினை கொண்டது. மூலதனமானது, அனேகமாக, காலாண்டு அடிப்படையில் அல்லது கருத்திட்டத்தின் காசுப் பாய்ச்சலுடன் பொருந்துகின்ற திட்டத்திற்கு அமைவாக மீள் கொடுப்பனவு செய்யப்படுகின்றது.
கடன் வசதியினை அங்கீகரிப்பதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்?
பொதுவாக எமது அங்கீகார செயன்முறையானது நாம் மத்திய மயப்படுத்தப்பட்ட செயன்முறைப்படுத்தல் முறைமையொன்றினைக் கொண்டிருப்பதனால் மிகவும் விரைவானதாகும். வேண்டப்பட்ட அனைத்து தகவல்களும் கிடைக்கப்பெறுமாயின், அத்துடன் ஒழுங்குமுறைப்படுத்தல் அனுமதிகள் செயற்பாட்டில் உள்ளவிடத்து அங்கீகாரம் ஒன்றுக்கு தேவையான உயர்ந்த பட்ச காலம் 3 முதல் 4 வாரங்களாகும்.
தேவைப்படும் தகவல்கள் யாவை?
தேவைப்படும் தகவல்கள் முன்மொழிவினைச் சார்ந்து வேறுபடுகின்றன. பொதுவாக, கடன் வசதியொன்றினை அனுமதிப்பதற்கு பின்வரும் தகவல்கள் எமக்கு தேவைப்படும்.
- ஊக்குவிப்பவரின் நம்பகத்தன்மை மற்றும் தகைமை பற்றிய சான்றுகள்
- கம்பனியின் முகக் குறிப்பு
- உற்பத்தி, செயன்முறை, சந்தை, மக்கள், செலவு, எதிர்வு கூறல்கள், நிதியளித்தல் வழிமுறைகள் உடள்ளடங்கலாக அனைத்து தகவல்களுடனான கருத்திட்ட முன்மொழிவு
- அனைத்து அவசிமயமான ஒப்புதல்கள் (உள்ளக மற்றும் வெளிவாரி)
- உறுதிப்படுத்தப்பட்ட கட்டளைகள், உத்தரவாதங்கள், விற்பனை உடன்படிக்கைகள் என்பவற்றின் சான்றுகள்
ஆவணங்கள்
ஆவண விடயங்கள் உள்ளக சட்ட அலுவலர் மூலம் கையாளப்படுகின்றன. வெளிவாரி சட்ட ஆலோசனை மற்றும் மதியுரை சேவைகள், கடன் வசதியின் தன்மையினைச் சார்ந்து பெற்றுக் கொள்ளப்படுகின்றன.
ஏற்படும் ஏனைய செலவுகள் யாவை?
ஏற்புடையதாயின் நியதிச் சட்ட வரிகளைத் தவிர மிகவும் குறைந்த செயன்முறைப்படுத்தல் கட்டணம் அறவிடப்படும்.
யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும்?
திருமதி தேவிகா சில்வா
பிரதி பொது முகாமையாளர்
தொ.பே.:011-4940261
தொ.ந.:011-2370310
மின்னஞ்சல்:dgm.cfi@nsb.lk