தேசிய சேமிப்பு வங்கி, உங்களது கனவு இல்லத்தினை நனவாக்குவதற்காக கவர்ச்சியான வட்டி வீத்த்திலும் விசேட அம்சங்களுடனும் பல வகையான வீடமைப்பு வசதிகளை உங்களுக்கு வழங்குகின்றது.
பின்வரும் நோக்கங்களுக்கு உங்கள் கடன் தேவையா?
- வீடொன்றினை நிர்மாணிப்பதற்கு
 - வீடொன்றினை கொள்வனவு செய்வதற்கு
 - காணி ஒன்றினை கொள்வனவு செய்வதற்கு
 - பூரணமடையாத வீடு ஒன்றினை பூரணப்படுத்துவதற்கு
 - தற்போதுள்ள வீடொன்றினை புதுப்பிப்பதற்கு
 - வேறு இடங்களில் இருந்து பெற்றுக் கொண்ட தற்போதுள்ள வீடமைப்புக் கடன்களை மீட்பதற்கு
 
தேசிய சேமிப்பு வங்கி வீடமைப்புக் கடனை யார் பெற்றுக் கொள்ள முடியும்?
எவரேனும்,
- நிரந்தர தொழில் பெற்றுள்ள இலங்கை பிரஜை
 - சுய தொழில் செய்கின்ற இலங்கை பிரஜை
 - வெளிநாட்டிலுள்ள ஊழியர் ஒருவர்
 - வரி செலுத்துகின்ற இலங்கை பிரஜை
 
போன்ற எவரேனும் இலங்கை பிரஜை இக்கடனை பெற்றுக் கொள்ளலாம்.
பெற்றுக் கொள்ளக்கூடிய கடனின் பங்கீட்டு அளவு யாது?
கடன் வசதி உங்களது,
- மீள் கொடுப்பனவு கொள்ளளவு
 - வயது
 - பிணைய உறுதியின் பெறுமதி
 - நோக்கம்
 
போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.
கிடைக்கப் பெறும் வீடமைப்புக் கடன்கள்,
- என்எஸ்பி எக்ஸ்பிரஸ் வீடமைப்புக் கடன் – 4 முதல் 10 நாட்களுக்குள் கடன்களுக்கானது
 - என்எஸ்பி அலங்கார வீடமைப்புக் கடன் – உங்களது இல்லத்தின் தோற்றத்தினை மேம்படுத்துவதற்கு
 - என்எஸ்பி இதுரும் நிவச – கிரமமாக வருமானம் உழைக்கதோருக்கு
 - என்எஸ்பி ரட்ட இதுரு – வெளிநாட்டில் வருமானம் உழைப்போருக்காக
 
தேசிய சேமிப்பு வங்கியின் வீடமைப்புக் கடன்களை பெற்றுக் கொள்வதற்கு எளிதாக உங்களது அருகாமையில் உள்ள தேசிய சேமிப்பு வங்கிக் கிளைக்கு வருகை தாருங்கள் அல்லது எமது 24 மணி நேர சேவை உடனடி அழைப்பான +94112379379 என்ற இலக்கத்தின் ஊடாக மேலதிகத் தகவல்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
தேசிய சேமிப்பு வங்கியின் வீடமைப்புக் கடன், உங்களது அனைத்து வீடமைப்புத் தேவைகளுக்குமானது