“1st Homeowner” வீட்டுக்கடன் திட்டம்
வீடொன்றை உரிமையாக்கிக் கொள்வதற்கான முதற்கட்ட முயற்சி
தனது முதல் வீட்டை நிறுவுதல் அல்லது கொள்வனவு செய்வதற்காக இலங்கை வாழ்
இளம்பருவத்தினருக்கு உதவிக்கரத்தை நீட்டும் வகையில் தேசிய சேமிப்பு வங்கி “1st
Homeowner” என்ற பெயரில் வீட்டுக்கடன் திட்டமொன்றை அறிமுகம் செய்வதில் தேசிய
சேமிப்பு பெருமிதம் கொள்கின்றன.
முக்கியமான தன்மைகள்
- மனங்கவரக்கூடிய வட்டி வீதங்களும் நெகிழ்வுமிக்க கொண்ட நிபந்தனைகளும்
- முதற்தடவையாக தனக்கென்றே வீடொன்றை உரிமையாக்கிக் கொள்ள திட்டமிடுபவர்களுக்கென்றே விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
- வதியும் மற்றும் வதியாத இலங்கையர்களுக்கும் இதற்காக விண்ணப்பிக்கலாம்.
- இதற்காக விண்ணப்பிக்க தகுதிபெற்றோர் யார்?
► 18 வயதை பூர்த்தி செய்துள்ள இலங்கைப் பிரஜைகள்
► தாய் அல்லது தந்தையுடன் இணைந்து கூட்டாகவும் விண்ணப்பிக்கலாம் (தாய்/தந்தை 55 வயதினை விட குறைவானவராக இருத்தல் வேண்டும்)
► தொழில்சார் விசா, வெளிநாடொன்றில் நிலையான வதிவு கொண்ட (PR) அல்லது இரட்டைப் பிரஜா உரிமை கொண்ட வதியாத இலங்கையர்கள்
► கடன் மீள்செலுத்தும் இயலுமையை மற்றும் குறைந்து செல்லும் உத்தரவாத காப்புறுதியொன்றை DTA பெற்றுக்கொள்ளும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வயதெல்லை 60 வரை இக்கடன் வசதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
- கடன் வசதியை எதற்காக பயன்படுத்த முடியும்?
► உங்கள் உத்தேச முதல் வீட்டை அல்லது மாடி வீடொன்றை கொள்வனவு செய்வதற்காக
► காணியொன்றை கொள்வனவு செய்து வீடொன்றை கட்டுவதற்காக (கடன் தொகையில் 1/3 காணிக்காக)
► உங்கள் பெயரில் உள்ள காணியில் வீடொன்றைக் கட்டுவதற்கு