மொத்த சேமிப்புகளுக்கான சில்லறைச் சேமிப்புகள்
தேசிய சேமிப்பு வங்கி நிதி முகாமைத்துவக் கம்பனியானது, மக்களுக்கான முதனிலை சந்தை முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குவதற்கு தாபிக்கப்பட்ட தேசிய சேமிப்பு வங்கிக்கு முழுமையாக உரித்தான துணை நிறுவனம் ஒன்றாகும்.
தேசிய சேமிப்பு வங்கி நிதி முகாமைத்துவக் கம்பனி, ரூபா. 150 மில்லியன் ஆரம்ப மூலதனம் ஒன்றுடன் 2000 ஆம் ஆண்டில் தொழிற்பாடுகளை ஆரம்பித்து, தலைவர் அதேபோன்ற நிறுவன முகாமைத்துவம் உள்ளடங்கலாக தேசிய சேமிப்பு வங்கியின் பணிப்பாளர் சபையின் தலைமைத்துவத்தின் கீழ் மனதை கவருகின்ற வளர்ச்சி ஒன்றினை கண்டுள்ளது.
தேசிய சேமிப்பு வங்கி நிதி முகாமைத்துவக் கம்பனியானது, இலங்கை மத்திய வங்கியினால் நியமிக்கப்பட்டு ஒழுங்கு முறைப்படுத்தப்படும் உரிமம் பெற்ற முதனிலை வணிகர் மாத்திரமின்றி தேசிய சேமிப்பு வங்கியின் நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலமும் தேசிய சேமிப்பு வங்கியின் தனித்துவமான அரசாங்கத்தின் உத்தாரவத்தின் மூலம் துணையளிக்க்பபட்டுள்ளது.
முதனிலை சந்தை என்றால் என்ன?
முதனிலை சந்தை என்றால் பணச் சந்தை சாதனங்களை கொடுக்கல் வாங்கல் செய்வதற்கு மத்திய வங்கியினால் மாத்திரம் நியமிக்கப்படுகின்ற முதனிலை வணிகர்களின் பிரத்தியேகமான பரிமாற்றம் ஒன்றாகும். முதனிலை வணிகர்கள் மத்திய வங்கியினால் நடாத்தப்படும் காலமுறை ஏலங்களில் அரசாங்கப் பிணையங்களில் விலைக் கூறுகளை சமர்ப்பிப்பதற்கும் கொள்வனவு செய்வதற்கும் முடியும். பொதுவாக இவை மொத்த பெறுமதிவாய்ந்த சாதனங்களாகும். அவை,
- திறைசேரி உண்டியல்கள்
- திறைசேரி முறிகள்
- திறைசேரி மீள் கொள்வனவு ஒப்பந்தங்கள் மற்றும் நேர்மாற்று மீள் கொள்வனவு ஒப்பந்தங்கள்
தேசிய சேமிப்பு வங்கி நிதி முகாமைத்துவக் கம்பனியுடன் எவ்வாறு தேசிய பிணையங்களில் முதலிடுவது?
முதனிலை வணிகராக தேசிய சேமிப்பு வங்கி நிதி முகாமைத்துவக் கம்பனியானது முதனிலை சந்தை ஏலங்களில் அரசாங்கப் பிணையங்களுக்கு விலைக்கூறுகளை சமர்ப்பித்து கொள்வனவு செய்கின்றது. இதனைத் தொடர்ந்து போடடியான வீதங்களில் எமது வாடிக்கையாளர்களுக்கு நாம் பிணையங்களை வழங்குகின்றோம்.
எமது சேவைகள் கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள தேசிய சேமிப்பு வங்கி தலைமைக் காரியாலயத்தில் உள்ள எமது அலுவலகத்தில் அல்லது நாடு பூராகவும் ஏதாவது தேசிய சேமிப்பு வங்கிக் கிளையில் கிடைக்கப் பெறுகின்றன.