NSB ஸ்பீட் கேஷ்
ஸ்பீட் கேஷ் என்றால் என்ன?
NSB ஸ்பீட் கேஷ் என்பது எவரேனும் இரண்டு தரப்பினர்களுக்கு இடையில் நிதிய மாற்றல்களை வசதிப்படுத்துகின்ற பாதுகாப்பான மற்றும் விரைவான கருமபீட நிதி மாற்றல் சேவையொன்றாகும்.
நிதியங்களை மாற்றல் செய்வதற்கு தேசிய சேமிப்பு வங்கியுடனான கணக்கொன்று அவசியமா?
இல்லைவே இல்லை. நீங்கள் கணக்கு வைத்திருப்ப்பவராக இருப்பினும் சரி வைத்திருக்காதவராயினும் சரி என்எஸ்பி ஸ்பீட் கேஷ் சேவை உங்கள் நிதியல் மாற்றல்களை வசதிப்படுத்துகின்றது.
எவ்வகையான முறைகள் கிடைக்கப் பெறுகின்றன?
- காசு வைப்பு
இரண்டு தரப்பினரும் தேசிய சேமிப்பு வங்கியில் கணக்கு வைத்திருக்காதவர்களாயினும் கூட ”NSB ஸ்பீட் கேஷ் மாற்றல் பற்றுச் சீட்டு” ஒன்றினை பூரணப்படுத்துவதன் மூலம் உத்தேசிக்கப்பட்ட பெறுநருக்கு நிதியங்களை மாற்றல் செய்வதற்கு தேசிய சேமிப்பு வங்கிக் கிளை கருமபீடத்தில் தனிப்பட்டவர்கள் பண வைப்புச் செய்ய முடியும்.
- சேமிப்புக் கணக்குகளிலிருந்து மீள் எடுப்புகள்
பணம் அனுப்புபவர், பற்று வைக்கப்பட வேண்டிய தொடர்புடைய சேமிப்புக் கணக்கினை குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டிய பணத் தொகைக்கு முறையாக பூரணப்படுத்தப்பட்ட ஸ்பீட் கேஷ் பற்றுச் சீட்டினை கிளையில் கையளிக்கலாம். இக்கொடுக்கல் வாங்கல் முறையில் பணம் அனுப்புபவர் கணக்கு வைத்திருப்பவராக இருக்கின்ற அதே வேளை பெறுநர் கணக்கு வைத்திருப்பவராக இல்லாதிருக்கலாம்.
- இணைய வழி வங்கிச் சேவை
தேசிய சேமிப்பு வங்கி இைணய வழி வங்கிச் சேவை வசதியினை பெற்றுக் கொண்டுள்ள வாடிக்கையாளர்கள் உத்தேசிக்கப்பட்ட பெறுநர்களுக்கு அவர்களது கணக்குகளிலிருந்து பற்று வைப்பதன் மூலம் நிதியல் மாற்றல்களை செய்யலாம். பெறுநர் தேசிய சேமிப்பு வங்கியின் எந்த ஒரு கிளையிலிருந்தும் கரும பீடத்தில் பணத்தினைப் பெற்றுக் கொள்ளலாம்.
பணத்தினை எவ்வாறு சேகரிப்பது?
பெறுநர் ஏதேனும் தேசிய சேமிப்பு வங்கிக் கிளைக்கு வருகை தந்து தனிப்பட்ட அடையாள இலக்கத்தினையும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தினையும் வழங்குவதன் மூலம் மாற்றல் செய்யப்பட்ட நிதியத்தினை பணமாக பெற்றுக் கொள்ளலாம்.
ஏதேனும் நிதிய மாற்றல் வரையறைகள் காணப்படுகின்றனவா?
ஆம், அவ்வாறு காணப்படுகின்றன. ”NSB ஸ்பீட் கேஷ்” ஊடாக ஒரு ஆள் மாற்றல் செய்யக் கூடிய குறைந்த பட்ச பணத் தொகை ரூபா. 1000/= ஆகும். அதே போன்ற அதிக பட்ச தொகை ரூபா. 2 மில்லியன் ஆகும். ஒரு நாளைக்கு ஒருவருக்கு ஒரு கொடுக்கல் வாங்கல் மாத்திரம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஏதேனும் சேவைக் கட்டணங்கள் அறவிடப்படுமா?
ஆம், சிறிய கட்டணம் ஒன்று அறவிடப்படும்.
மேலதிக விபரங்களுக்கு, தேசிய சேமிப்பு வங்கியின் 24 மணி நேர சேவை அழைப்பு நிலையத்தினை தொடர்பு கொள்ளவும். (+94112379379)