தேசிய சேமிப்பு வங்கியின் இணையவழி வங்கிச் சேவை
முற்றிலும் இலவசமான தேசிய சேமிப்பு வங்கியின் இணையவழி வங்கிச் சேவை மூலம் உங்கள் அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ சௌகரியமாக இருந்தவாறு பலவகையான வங்கிச் சேவைகளை மிக வசதியாக அனுபவித்திடுங்கள்.
தேசிய சேமிப்பு வங்கியின் இணையவழி வங்கிச் சேவையினை யார் பெற்றுக்கொள்ளமுடியும்?
- தேசிய சேமிப்பு வங்கியில் கணக்கொன்றைப் பேணுகின்ற
எந்தவொரு இலங்கைப் பிரைஜயும் இவ்வசதியினைப் பெற்றுக்கொள்ளலாம்.
தேசிய சேமிப்பு வங்கியின் இணையவழி வங்கிச் சேவை மூலம் கிடைக்கப்பெறும் சேவைககள்
- உங்களுக்கு உரித்தான எத்தனை கணக்குகளையும் தொடர்புபடுத்தலாம்(சேமிப்பு, நிலையான வைப்புகள்,கடன்கள்,ஈசி கணக்குகள்,வதியாதோர் வெளிநாட்டு நாணயக் கணக்கு/வதிவோர் வெளிநாட்டு நாணயக் கணக்கு)
- மீதி விசாரணைகள்
- உபயோகப்பட்டியல் கொடுப்பனவுகள்
- சொந்த கணக்குகளுக்கிடையிலான அல்லது தேசிய சேமிப்பு வங்கியில் அல்லது வேறு வங்கிககளில் உள்ள மூன்றாம் தரப்பினர் கணக்குகளுக்கான நிதிய மாற்றல்கள்.
- தேசிய சேமிப்பு வங்கி கிளை வலையமைப்பினுள் கருமபீடத்திலான நிதிய மாற்றல்கள்
தேசிய சேமிப்பு வங்கியின் இணையவழி வங்கிச் சேவை வசதியினைப் பெற்றுக்கொள்ள எளிதாக விண்ணப்பபடிவத்தினை தரவிறக்கம் செய்து பூரணப்படுத்தப்பட்ட படிவத்தினை நீங்கள் கணக்கு வைத்திருக்கும் கிளையில் கையளிக்கலாம்.
மேலதிக விபரங்களுக்கு +94 11 2 379 379 என்ற எமது 24 மணி நேர உடனடி இலக்கத்தை அழையுங்கள்.
” தேசிய சேமிப்பு வங்கி இணையவழி வங்கிச் சேவை – வங்கித்தொழிலின் நவீன முன்னேற்றத்திற்கு உங்களை எடுத்துச் செல்லுகின்றது.
நிபந்தனைகளுக்குட்பட்டது