உங்களது பணத்திற்கு மிகவும் பாதுகாப்பான இடம் |

NSB Bank Sri Lanka Banner
ஆங்கிலம் இலகுவானது

நிலையான அபிவிருத்தி இலக்குகள் (SDGs)

நிலையான அபிவிருத்தி என்பது எதிர்கால சந்ததியினர் தங்கள் சொந்த தேவைகளை பூர்த்தி செய்யும் திறனை விட்டுக்கொடுக்காது நிகழ்காலத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான ஒரு முன்னேற்றம் என வரையறுக்கப்பட்டிருக்கின்றது.

நிலையான அபிவிருத்தியானது மக்களுக்கும் பூமிக்கும் ஒரு உள்ளடங்கிய, நிலையான மற்றும் நெகிழக்கூடிய எதிர்காலத்தை கட்டமைப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளை நோக்கியதாக அமைகின்றது.

2015 இல், ஐக்கிய நாடுகள் சபையின் 192 உறுப்பு நாடுகளுடன் இணைந்து நிலையான அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சி நிரல் மற்றும் 17 நிலையான அபிவிருத்தி இலக்குகள் (SDGs) ஆகியவற்றிற்கு இலங்கை தனது அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தியது. 2030 நிகழ்ச்சி நிரலானது, அபிவிருத்தியின் பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் பரிமாணங்களை ஒருங்கிணைக்கும் ஒரு அணுகுமுறையின் ஊடாக நிலையான அபிவிருத்திக்கான பாதையை செழுமைப்படுத்த இலங்கைக்கு உதவியுள்ளது.

SDGs 2016 ஆம் ஆண்டு ஜனவரியில் இலங்கையில் நடைமுறைக்கு வந்தன. மேலும் UNDP (ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம்) 2030 இல் SDGs களை வெற்றிகரமாக செய்து முடிக்க உலகிற்கு தொடர்ந்து வழிகாட்ட திட்டமிட்டுள்ளது.

உலகளாவிய இலக்குகள் என்று அழைக்கப்படும் இந்த நிலையான அபிவிருத்தி இலக்குகள் (SDGs), வறுமையை முடிவுக்குக் கொண்டு வருதல், பூமியைப் பாதுகாப்பதற்குமான நடவடிக்கைகள், மற்றும் அனைத்து மக்களும் அமைதி மற்றும் செழிப்பை அனுபவிப்பதை உறுதி செய்வதற்கான உலகளாவிய அழைப்பாகும்.

2019 ஆம் ஆண்டில், கல்வி அமைச்சின் ஒருங்கிணைப்புடன் தரமான கல்வி முன்முயற்சியின் கீழ் ளுனுபு திட்டமான “ஆங்கிலம் இலகுவானது” என்ற திட்டத்தை வங்கியானது தொடங்கியது.

 

ஆங்கிலம் இலகுவானது

கல்வி அமைச்சின் (MoE) ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் கிளையின் (EFLB) ஒத்துழைப்புடன் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

  • இத்திட்டத்தின் பயனாளிகள் அமைச்சின் பரிந்துரையின் பேரில் தேர்ந்தெடுக்கப்பட்டனர், அவர்கள் க.பொ.த (சா/த) பரீட்சையில் ஆங்கில மொழியில் 50% க்கும் குறைவான தேர்ச்சி வீதங்களைக் கொண்ட 81 தேசிய பாடசாலைகளின் தரம் 8, 9, 10 மற்றும் 11 ஐச் சேர்ந்த மாணவர்களாகும்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட 81 பாடசாலை மாணவர்களின் க.பொ.த (சா/த) பரீட்சையில் தேர்ச்சி வீததத்தை அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகரிப்பதே திட்டத்தின் நோக்கமாகும்.
  • வளப் பணியாளர்களைக் கொண்ட ஒரு நிபுணர் குழு, பாடப்புத்தகங்களுக்கான உள்ளடக்கத்தை (செயல்பாடுகள் மற்றும் மாதிரித் வினாத்தாள்கள்) பயிற்சிப் பட்டறைகளுடாகத் தயாரித்துள்ளது
  • “ஆங்கிலம் இலகுவானது” என்ற திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 2019 ஒக்டோபர் 11 ஆம் திகதியன்று கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் பொது முகாமையாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோரின் பங்கேற்புடன் கையெழுத்தானது.

 

இணையவழி வங்கிச்சேவை